Tuesday, 18 February 2014

தாயின் தவிப்பு.

தாயின் தவிப்பு

ஏனழுதாய் ஏனழுதாய்
இளவஞ்சி ஏனழுதாய்!
நானழுது ஓயுமுன்னே
ஏனழுதா யென்மகளே!

மேஸ்திரியோ மிரட்டுகிறான்
மேலே வர அழைக்கிறான்
நாளை வேலை யச்சாரமாய்
நான் போக வேண்டுமடி!!

உன்னை நான் வளர்ப்பதற்கு
என்னை நான் இழந்தேனே.
பெண்ணாய் நீ சிறப்பதற்கு.
மண்ணாகிச்சிதைந்தேனே

நீ வளர்ந்து மங்கையாகி
நிலம் போற்றும் அன்னையாகி!
நான் வாழ்ந்த விதம் மறைய
நலம் வாழக் கண்ணுறங்கு!



கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment