Tuesday, 18 February 2014

ஆசைப் பொருளோ பெண்கள்!

மகளீர் தினம்.

மாதராய்ப் பிறப் பதற்கு
மாதவம் செய்தல் வேண்டும்.
ஏங்கிய கவிஞரும் விரும்பி
மாதராய்ப் பிறப்பரோ இன்று!

மகளீர் தின நாளிலின்று
மகளீர்க்கோ மகிழ்ச் சியில்லை
மகளீரும் மனித ரென்றே
மனதிற் கொள்ள மனிதமில்லை.

தனியொரு சீவமகள்
தனிவழிக் காப்பில்லை
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறது.

பாலியல் கொடுமைகள்
பாலகரும் படுகிறார்கள்.
ஆசைப் பொருளோ பெண்மை!
அலையும் வேசையோ
ஆண்மை!

மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடுவரோ!
வெறி நாய்கள் ஒழிபடுமோ!
வேலு நாச்சி எழுமுன்னே.

மகளீர் படுந் துயரங்கள்
மனந் தாங்கிக் கொள்ளூமோ!
கற்பழிக்கும் கொலைக் குற்றம்
அற்பர் அழிப்பு அவசரம் சட்டம்.

கொ.பெ.பிச்சையா.








No comments:

Post a Comment