Tuesday, 18 February 2014

தாலியா வேலியா?

தாலி !

தாலிக்குத் தங்கந்தரும்
தர்மத்தை வாழ்த்துகிறேன்.
தாலியேத் தங்கமென்றும்.
தமிழுக்குச் சாட்சியில்லை.

மங்கள அடையாளம்
மஞ்சளைச் சூட்டினாலும்.
நன்கலம் அதுசொல்லும்
நாடறியச் சங்கமம்..

பெண்ணுக்குக் காப்பாக
மண்ணுக்கு ஒழுக்காக
கண்ணுக்குக் காட்சியாக
காணும் மனை மாட்சியது.

தாயாகும் பெருமையதை
தமிழ் தந்த அருமையதை
வேலியெனச் சொல்லியதை
வேறர்த்தம் செய்யாதீர்!.

மனைமாறி வந்தவளை
துணையாக வரவேற்று
அணிவிக்கும் திருநூலை
அன்புறவு எனயேற்றுவீர்!

நிலம்,நீர்காற்று மூன்றாய்
நலங்காக்குஞ் சத்தியமாய்.
ஆகாயம் நெருப்புச் சாட்சி
அணிவ ததாம் மும்முடிச்சு

அழகுசெய்யுந் தாலியதை
ஆதித்தமிழ் கண்டததை
பழகிவரும் ஒழுக்கங்காத்து
பொறுமையுடன் வாழ்கவே!

கொ.பெ.பிச்சையா.










No comments:

Post a Comment