Tuesday, 18 February 2014

முற்றிய நாகரகம்.

முற்றிய நாகரீகம்

பற்றி எரியிதோ!
தொற்றிய புதுமைகள்
தொல்லினைத் துடைத்ததோ!
கொத்தும் வாலிபம்
சுற்றித்திரியுதோ!
கெட்டும் மானமும்
காற்றில் பறக்குதோ!
விற்றும் கற்பும்
விலையும் ஆகுதோ!
பற்றும் பண்பும்
பாடை ஏறுதோ!
அற்றும் அடக்கம்
ஆசை மீறுதோ!
கத்தும் பெண்மைகள்
காற்றில் கேட்குதோ!
பற்றும் அவலங்கள்
பரவிப் பதறுதோ!
குற்றமும் கொலைகளும்
கும்மி கொட்டுதோ!
பட்டும் பாவைகளும்
பலிகளாகுதோ!
மொட்டும் பிஞ்சுகளும்
பட்டும் அழிகிறதோ!
பாலியல் கொடுமைகள்
வேலி தாண்டி மேய்கிறதோ!
இறைவன் அறிவானோ!
இருந்தால் இரங்குவானே!
இருந்தும் உரங்குவானோ!
வருந்தும் மனமிலையோ!
வதஞ்செயத் துணிவிலையோ!

கொ.பெ. பிச்சையா.

No comments:

Post a Comment