பெண்களென்ன பாபர் மசூதிகளா?
பெண்களென்ன பாபர் மசூதிகளா?
ஆண்களெம்மை இடிப்பதற்கு!
இடிக்கத் துணியும் ஆண்களே
கட்ட மட்டும் மறுப்பதேனோ!
பெண்களென்ன தங்கமோ!
ஆண்களெம்மை உரசுதற்கு!
பொன்னல்ல என்பதாலே
கண்ணீரை உதிர்க்கிறோம்!
பெண்களென்ன சிலைகளோ!
ஆண்களெம்மை இரசிப்பதற்கு!
அரங்கேறாக் கலைகளாய்
அறை முடங்கி அழிகிறோம்!.
பெண்களென்ன புறம்போக்கா!
ஆண்களெம்மை மேய்வதற்கு!
தரிசாகிப் போவோமோ!
கருகித்தினம் சாவோமோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment