Thursday, 23 October 2014

கண்ணுள் விரதம்.

கண்ணுள் விரதம்.

புண்ணியம் என்றே எண்ணுக நன்றே
பெண்ணினம் ஒன்றே மண்ணதில் கொண்டே.
தன்னுயிர் தந்தே உன்னுயிர் ஈந்தே
தன்னலம் கண்டாள் உன்னலம் வென்றே!

அன்னையர் இனமோ! பெண்ணுயர் கணமோ!
நன்னய தனமோ! பொன்னயர்  குணமோ!
கண்ணது நலமோ! பெண்ணவள் வளமோ!
இன்னது உலகோ!முன்னவள் களமோ!

மாதென்ன ஏனமோ சூதினில் போனதாம்.
ஏதினி மானம் இழந்தது பாரதம்.
உருவிய துயிலுக்குள் ஒளிந்துள்ள மானம்
உயிரா மயிரா தொலைத்திட வேறெதும்!

உணர்வைத் தந்தவள் பெண்ணென மறந்தே
கனவைச் சிதைத்துக் காந்தாரி பறித்தே
கட்டாயப் படுத்தி கபோதிக்கு முடித்தே
கெட்டான் பிதாமன் சகுனியை இழுத்தே!  

தன்னுள் உணர்வு பெண்ணவள் கனவு
பெண்ணுள் உரிமை எண்ணவும் நினைவு.
கண்களைக் கட்டிய காந்தாரி சபதம்
பெண்ணை ஏற்றவே கண்ணுள் விரதம்.

கண்ணே பெண்ணே தன்னே கலங்கிட
என்னே பின்னே நன்னே விளங்குமோ!
பெண்ணே என்னே தன்னே துலங்கிட
திண்ணே இன்னே முன்னே முழங்குதோ!

பாஞ்சாலிப் பெண்ணின்றும் சபதம் எடுத்தாள்.
காந்தாரிக் கண்ணவிழ்த்தும் விரதம் விடுத்தாள்.
பெண்ணைப் போற்றா எண்ணவர் எல்லாம்.
தன்னைக் காக்க முன்னிலை துறப்பார்.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 20 October 2014

பெண்ணே வாழ்க!


பெண்ணே எழுகவே!

நான் நான் என்றே பெண்ணென வாழும்
நாள் நாள் தானே நிகழ்ந்தது நிசமே!
ஏன் ஏன் என்றே எவரும் பேசும்
காண் காண் நன்றே ஜெயமே வாழ்கவே!
பெண்ணே வாழ்கவே!

கண்டதும் கைதொழும் கருணை வடிவே!
நின்றதும் பொய்விழும் திருமை உருவே!
கொண்டதும் துணிவே பெண்மை நிறமே!
சென்றதும் மனமெழும் தன்மை வரமே!
பெண்ணே வரமே!

இன்பம் துன்பம் எதுவானாலும் சமமே
நன்மை தீமை நடுவே வாழும் பலமே!
பாடு எல்லாம் பகவதி போலும்.குணமே
மேடு பள்ளம் கடந்தே மீளும் இனமே!.
பெண்ணினமே!

சோதனை வென்றும் சாதனை படைப்பாய்!.
வேதனை கொன்றும் தீதினை உடைப்பாய்.!
எதிர்வினை கண்டும் சதுர்வினை முடிப்பாய்!
முதிர்வினை மிஞ்சும் புதுவினை துடிப்பாய்!
பெண்ணே துடிப்பாய்.

பெண்ணினச் சுதந்திரப் பிறவி எழுகவே!
தன்னினம் உயர்த்திட தானே எழுகவே!
எண்ணிடப் பெருமை இறைவி எழுகவே!
மண்ணிடம் அருமை நீயே எழுகவே!
பெண்ணே எழுகவே!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 7 March 2014

மகளிர் தினம்.

மகளிர் தினத்தில் இன்று!
.
மாதராய்ப்  பிறப் பதற்கோ
மாதவம்  செய்தனரோ வென
ஏங்கிய கவிஞரும் விரும்பி
மாதராய்ப் பிறப்பரோ இன்று..
மகளீர் படுந் துயரங்களை
மனந் தாங்கிக் கொள்வரோ!

மகளீர் தின நாளின்று
மகளீர்க்கோ மகிழ்ச் சியில்லை.
மகளீரும் மனித ரென்றே
மதிக்கத் தெரியா நாய்களால்..
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடுவரோ!

ஆசைப் பொருளோ மாதரும்?.
அலையும்  வேசைப் பயல்களே!
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறதே!
வெறி நாய்கள்  ஒழிப்போமே!
வேலு நாச்சி  எழுமுன்னே.


கோ.பெ.பி.அய்யா.



Thursday, 6 March 2014

கோலமென்ன பெண்ணே!

கோலம் போடும் பெண்ணே

கோலம் போடும் பெண்ணே—உன்
கோலம் பாடத் துணிவாயா?
தாலாட்டும் பெண்ணே—உன்
தகவென்ன அறிவாயா?

கோலம் போடத்தானா பெண்
குலத்தினில் பிறந்தாயா?
தாலாட்ட மட்டுந்தானா நீ
தாயாக வந்தாயா?

வீட்டுக்கு மனைவியென்றால்—வெறும்
வீட்டுவேலை செய்யத்தானா?
பெண்ணென்று பிறந்துவிட்டால்—அவள்
பிள்ளைப் பெறும் எந்திரமா?

உணர்வென்ற ஒன்றது--காண்
உனக்குள்ளும் உண்டல்லவா?
கனவென்ற கற்பனையும்—உனை
கணக்கிலது கொள்ளவில்லையா?

ஆறாவது அறிவதனை—ஏன்
ஆண்டவனும் மறந்தானா?
இருப்பதை நீமறந்து—ஒரு
எடுபிடி ஆனாயா?

அழகையும் அறிவையும்—ஆம்
ஆணைவிட பெண்ணுக்கே
அதிகமாய் அள்ளித்தந்தும்.—வீண்
புதையலாய் ஒளித்தாயா?

படைப்பினில் குறையில்லை-இவர்
பழக்கியதுதான் சரியில்லை.
சதியென மெய்யுணர்ந்து—மெய்
விதியெழுத எழுகவே!!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 February 2014

மண் மணக்கிறது.

ஊட்டிக் கனி!

மண் மணக்குது ! மண் மணக்குது!
மழையும் பொழியப் போகுது!
பெண்  சிரிக்குது !பெண் சிரிக்குது!
பேச ஏதோ விழையுது!

கண் விரிக்குதுகண் விரிக்குது!
காதல் அங்கே பிறக்குது!
ஒளி தெரியுதுஒளி தெரியுது!
விழியில் காதல் மொழிகிறது!

பெண் வளருது! பெண் வளருது!
கண்ணில் என்னை வரையுது!
பண் மலருதுபண் மலருது!
பாட்டாய் என்னைப் பாடுது!

விண் கருக்குதுவிண் கருக்குது!
வேளை கூடி வருகுது!
தண்ணெடுக்குது !தண்ணெடுக்குது!
தாவி அணையத் துடிக்குது!

திண்ணெடுக்குதுதிண்ணெடுக்குது!
தேவியவள் வாசமே!
உண்ணழைக்குதுஉண்ணழைக்குது!
ஊட்டிக்கனி நேசமே!

கொ.பெ.பி.அய்யா.









பாவாடை தாவணி.

பாவாடை தாவணி!

பாவாடை தாவணிக்கு
பூவாடை பொய்யெதற்கு?
ஆவாடை சேலைக்கு
மேவாடை அணியெதற்கு?

கண்ணுக்கு அழகாகும்
பெண்ணுக்குத் தாவணியாம்.
மண்ணுக்குப் பெருமையாம்
பண்புக்கு சேலையாம்.

பாவாடை தாவணிக்கு
பாசமே நேசமாகும்.
காவாடை சேலைக்கு
கருணையே வாசமாகும்.

அகந்தனில் அன்பிருக்க
விகற்பங்கள் நேராது.
உகந்தசேலை தாவணியில்
முகம்மலரும் தாய்மையே!

தமிழ்சொன்னப் பண்பாடு
தவறாது கொண்டிட்டால்
கமழுமே தேவமணம்
சமமாகும் கற்புநிலை.


கொ.பெ.பி.அய்யா. 

விலை மகளா?

விற்பனைப் பொருளா அவள்!

விலை மகளென்றும் சொல்லாதீர்
விற்பனைப் பொருளா அவள்?
இறை மகளென்பீர் அவளை--அவள்
இறைக்கொடையில் வாழ்வதால்

தாசியென்றும் வேசியென்றும்
நேசத்தைப் பழிப்பதும் பாவம்.
ஆசைக்கு அழைப்பவளா அவள்---இல்லை
காசைத்தான் சேமிப்பவளா!!

வயிறோடு போராடத்தானே தினம்
கயிறிலும் நடக்கிறாள் வேலையில்.
உயரத்தில் ஏறவிட்டு பார்க்கிறான்--ஒடுங்கி
வியர்த்து ஒழுகுவதையும் ருசிக்கிறான்.

கூசியே வறுமையில் இறப்பாளோ!
பாசக்குழந்தையையும் துறப்பாளோ!!
வீசியும் வீசிட வீணாகும் அழகை--வாழக்
காசாக்கிட அவளும் துணிகிறாள்.

மானம் காப்பதே பெரும்பாடானால்
வானம் கீழே வாழ்வதெப்படி?
நாணம் மறந்தாள் தொழிலென்று---தானே
ஏனமானாள் விதியென்று.

ஒளித்தால்தானே தேவை விழிப்பு
விரித்தால் ஏது பாவை அழிப்பு!!
வளர்த்தால்தானே ஈரும் பேனும்--மழுங்க
மளித்தால் என்ன பேண வேணும்?

குடும்பப் பசியாம் கும்பிகள் நிறைக்க
கொடூரக் காம மிருகங்கள் வெறிக்கு
படைக்கிறாள் விருந்தும் தானே--இரையாய்
இறையடியாள் இன்பப் படையலாய்

பிறன் மனை நோக்கா பேராண்மை
அறனாம் அற்புதம் நிகழ்ந்திட்டால்
பிறழாது பெண்மையும் வாழ்ந்திடும்---ஒழுகுந்
திறமும் வாழ்வில் உயர்ந்திடும்.

பயனுறு இன்பங்களும் பதினாறு செல்வங்களும்
நயனுறு திலகமும் நன்னூல் மங்களமும்
அயனுறு காதலும் அமைந்திடவும்---நிறைந்து
வியனுற வாழ்ந்து வெல்கவே வாழ்வே!

பிறன்மனை நோக்கா பேராண்மை சானறோர்க்கு
அறனெனப்பட்டதே இல் வாழ்க்கை.


கொ.பெ.பி.அய்யா.




ஆதரிக்க யார்?


ஆதரிக்க ஆளில்லை!

என்ன இது!
எவ்வளவு நேரமாகக்
குழந்தை அழுகிறது!
அதற்கு-
ஆதரவு  காட்டி
அரவணைக்க ஆளில்லையோ!

குரல் கொடுத்தேன்--
பதிலில்லை.
தட்டிப் பார்த்தேன்
தாழிடவும்  இல்லை.
தானாகவேத் திறந்தது.
எட்டிப் பார்க்கவும் தயக்கம்-
இருந்தாலும் ஒஞ்சியே
இடுக்கலின் ஒடுக்கிலே
இலகுவாகப் பார்த்தேன்-

அய்யய்யோ................
என்ன கொடுமை !!!
அந்தக் காட்சியைக் காண
நானென்ன பாவம் செய்தேன்!
பதிறியே கதவைப்
படீரெனத் தள்ளியே
நுழைந்து விட்டேன் உள்ளேயே!
.
பாலுக்காக அழவில்லை
பசிக்காகவே அழுதது.
தாயவள் காய்ச்சலால்
சாய்ந்து கிடக்கிறாள்.
அவளது உடல் வீசும்
அனலோ குழந்தைக்கு
ஒப்பாமல் முகம் வேர்க்கிறதே!

 உடல் நனைகிறது.
அதற்குந் துணிந்தே
அன்னையின் மார்பை  
அதுவே விலக்குகிறது..
ஆவி ஆவிக் குடிக்கிறது
ஆனாலும் அழுகிறதே......
பசிதான் அட்ங்கலையோ!

பசிதீர்ந்த பின்னுங்கூடப்
பாசத்திற்கு அழுகிறதோ!..
அப்பனோ அலுவலுக்குச்
சென்று விட்டான்.
அப்பனைப் பெற்றவர்களையும்-
அனாதை இல்லம்-
சேர்த்து விட்டார்கள்.
.
பாவம் அந்தக்
குழந்தை!அதைப்-
பார்ததுக் கொள்ள யாருண்டு?
பெற்றவளைப் பற்றிய நோய்...
வைரசுத் தாக்கமென்றால்--
தொற்றுமே குழந்தைக்கும்!
என்ன நான் செய்யட்டும்!

என்னால் முடிந்ததோ.......!
இருவரையும் மருத்துவமனை
சேர்த்து விட்டேன்.
அவ்வளவுதான்.
அப்புறம் ஆண்டவனும்
துணை செய்வானோ!
முதியோரைப் பாரமென
ஒதுக்குவோர்க்கெல்லாம்.......
கதியிதுதான் காணுவீர்!

கொ.பெ.பி.அய்யா,






செல்வக் களஞ்சியமே!

சின்னஞ்சிறுக் கிளியே !

சின்னஞ்சிறுக் கிளியே !
செல்வக் களஞ்சியமே!
எண்ணப் பெருங்கொடையே!-என்றும்
இனிக்கும் தேனமுதே!(சின்ன)

உன்னைத் தீண்டையிலே
உள்ளம் குளிர்கிறதே!
என்னை நினைக்கையிலே!-கர்வம்
ஏறி வளர்கிறதே!(சின்ன)

அன்னை மடியினிலே!
ஆசை நிறைத்தவளே!
என்னை அவள் வடிவில்-வடித்து
உன்னைக் கொடுத்தவளே!(சின்ன)

தன்னை உணவாக்கி
அன்னை வளர்த்தாளே
உன்னில் என்னுயிரை-அவள்
ஊட்டி வடித்தாளே!(சின்ன)

முன்னைப் பெரியவர்கள்
உன்னில் தெரிகின்றர்.
இன்னை என் தோளில்நீயோ
பின்னை எழுதுகிறாய்.(சின்ன)

பெண் நீ பிறப்பதற்கு 
முன் தவம் இருந்ததற்கு
உன்னைப் பெற்றதற்கு-இறைவன்
உதவினான் வாழ்வதற்கு.(சின்ன)

பெண்ணின் பெருமைகளும்
உன்னில் அருமை சொலும்.
அன்னைத் தந்தையரும்உன்னால் 
அடைவோம் திருமைகளும்.(சின்ன)

உன்னைப் பெற்றதற்கும்
உலகம் எமைப் போற்றும்
பெண்ணை ஏற்றுதற்கும்நீயும்
உன்னை ஈந்திடணும்(சின்ன)

முன்னை மடைமைகளை
முறித்து ஒழித்திடணும்.
பெண்மை உடையொளித்தும்-தமிழின்
பண்பைக் காத்திடணும்.(சின்ன)

கற்றும் உயர்ந்திடணும்.
காலம் வென்றிடணும்.
முற்றுந் தெளிந்திடணும்வாழ்வில்
முதன்மை நின்றிடணும்.(சின்ன)


கொ.பெ.பி.அய்யா
  







சேதி கேளு பெண்ணே!

சின்னப்பொண்ணே !
-------------சேதி கேளு!

சின்னப்பொண்ணே!சின்னப்பொண்ணே!
சேதி கேளம்மா----உந்தன்
அன்னை பேச்சைக் கேட்டு வளர்ந்து
அருமை கொள்ளனும்------அம்மா
பெருமையடையனும்-----நீயும்
வளமை ஆகனும்.

காலம் மிகவும் கெட்டுப்  போச்சு
கருத்தில் கொள்ளனும்-----அழகுக்
கோலம் போன்றே உன்னைக் காக்க
தெரிந்து கொள்ளனும்-----நீயும்
புரிந்து நடக்கனும்------பக்கம்
அறிந்து பழகனும்.

பெண்ணினந் திண்ணும் பேய்கள் அலையும்
பார்தது விலகனும் ---எவரும்
அறியா மனிதர் அருகே வந்தால்
சரியா பேசி நெருங்காமல்----விட்டு
ஒதுங்கிப் போகனும்----பாப்பா
உசார் ஆகிடனும்

பள்ளி வீடு இரண்டுந்தவிர வேறெங்குமே
உற்றாரன்றி உறவென்று நம்பி
மற்றாருடனும் செல்லாதே----- எவரும்
திண்ணும் பண்டம் தந்திட்டாலும்
கண்டிட வேண்டாமே -----உடனே
அகன்று செல்லனுமே.


கொ.பெ.பி.அய்யா