Tuesday, 18 February 2014

பழமைச் சடங்குகள்.

வரலாறு படைப்போம்!!

பழைமைச் சாத்திரங்களை
பாடைகட்டி யேற்றுவோம்.
புதுமை ஒழுக்கங்களை
மேடையேற்றிப் போற்று
வோம்.
சிறுமைச் செலவுகளை
சிக்கனத்தில் நிறுத்துவோம்.
வறுமைப் பேய்களை
வம்சத்தை அழித்திடுவோம்.
திருமணச் சடங்குகளை
திருத்திச் சமைத்திடுவோம்.
வரதட்சனைக் கொடுமைகளை
வளராது வேரறுப்போம்.
அருமை இளைஞர்களை
அறவழி பேணச்செய்வோம்.
திருவளர்ச் சீர்களை
தெளிந்துமே தேடுவோம்.

வாழுமுறைக் கல்வியை
வகையுறக் கற்றிடுவோம்.
நாளும் வரும் புதுமைகளை
நயம்பட அறிந்திடுவோம்.
ஆகாத விரையங்களை
அடைத்து நிரை 

காலமெழுதும் வரலாறுகள்
கண்டெழுத வாழுவோம்.

கொ.பெ.பிச்சையா.




No comments:

Post a Comment